அரசியலில் என்ட்ரி கொடுக்க போகிறாரா ரஜினி?! ஏன் இந்த திடீர் முடிவு?!!

0
158

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள்மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12ஆம் தேதி ராகவேந்திரா திருமணமண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

நடிகர் ரஜினி படங்களை மறந்தாலும் கூட அவரது அரசியல் என்ட்ரி குறித்த பெரிய பில்ட் அப்பை மறக்க முடியாது. ஆனால், அனைத்திற்கும் அவரே முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுத்தார்.

மேலும், அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து 9 ஆம் தேதி காலை 2.30 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பினார்.

மேலும் அவர் வருகிற 12 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் சற்று குறைந்து வருவதால், இந்த ஆலோசனைக்கூட்டத்தை நடத்த அவர் முடிவு செய்திருக்கிறார் என கூறப்படுகிறது.

Previous articleஇன்று முதல் கொரோனா தடுப்பூசி இந்த இடங்களில் போடப்படும்! மாநகராட்சி அறிவிப்பு!
Next articleஇனி பெட்ரோல் விலையை கண்டு அஞ்சத் தேவையில்லை!!