10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!!

0
209

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!!

சென்னை: எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவையில் ஒன்றாக உணவு இருக்கிறது. நவீன காலத்தில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றமும் உணவின் விலை ஏற்றத்தையும் நாம் அறிந்திருப்போம். சென்னையில் 10 ரூபாய்க்கு மதிய உணவை வழங்கி பலருக்கு நல்ல சேவையை ரஜினியின் ஒருவர் வழங்கி வருகிறார்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த வீரபாகு என்கிற ரஜினி ரசிகர் மதிய வேளையில் தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளருக்கு தரமான சைவ உணவுகளை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். குறைந்த விலையில் உணவு வழங்குவதால் ஏற்படும் பண இழப்பை காலை மற்றும் இரவு உணவு விற்பனை மூலம் சரிக்கட்டுவதாக வீரபாகு தெரிவித்துள்ளார்.

பரபரப்பான இடங்களில் சாலிகிராமம் பெயர் பெற்ற இடம் அதுமட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் நிறைந்த இடமும் கூட. 10 ரூபாய் உணவில் மோர், ரசம், பொரியல் கிடைப்பதால் இந்த ஓட்டலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதால், அவரின் பெயரில் மக்களுக்கு நான் சேவை செய்கிறேன் என்றும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

Previous articleஆந்திராவக் காப்பாத்தியாச்சு;தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும்!விஜய் ரசிகர்களின் குறும்பு!
Next articleஉங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..?