இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அரட்டை அடிக்கும் சூப்பர் ஸ்டார்.!!

Photo of author

By Vijay

இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அரட்டை அடிக்கும் சூப்பர் ஸ்டார்.!!

Vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கொரோனா ஊரடங்குக்கு பிறகு தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கோரோனோ வைரஸ் தொற்று பரவியதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு அறிவித்த அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனது மருமகன் நடிகர் தனுஷின் புது வீடு பூஜை மற்றும் இளையராஜாவின் புது ஸ்டுடியோ என இரண்டுக்கும் மட்டும் வெளியே வந்தார்.

இந்நிலையில் இளையராஜாவின் புது ஸ்டுடியோ ரஜினியின் மனதுக்கு நெருக்கமான இடமாக ஆகிவிட்டதாம். வாரத்துக்கு ஒரு முறையாவது இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்று வருகிறாராம் ரஜினி.

மேலும், இளையராஜாவுடன் மணிக்கணக்கில் மனம்விட்டு பேசுகிறாராம் “நான் அடிக்கடி இங்கு வருவது உங்களுக்கு தொந்தரவு இல்லையே” என கடந்த வாரம் ரஜினி கேட்க “நீங்க வருவது எனக்கு அவ்வளவு ஆறுதலாக இருக்கு” என்றாராம் இளையராஜா.