அப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?
நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் குதிப்பேன் என்று கூறிவந்த நிலையில், தற்போது அவரின் அரசியல் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. கட்சியின் தலைமை வேறு, ஆட்சி அதிகாரம் செய்வது வேறு என்று புதிய அரசியல் வழியை ரஜினி பேசியுள்ளார். மேலும் தான் முதல்வர் பதவிக்காக எப்போதும் ஆசைப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் பத்திரிகை, செய்தி, ஊடகம், அரசியல் என்று தமிழகமே ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை பேசுவது போல் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் அரசியல் பேச்சினை வரவேற்பதாக கூறியுள்ளார். ஏனெனில், தமிழகத்தின் அரசியலில் தமிழர்களை தவிர்த்து அயலார் முதல்வர் பதவியை வகிக்க கூடாது என்று சீமான் கடந்த பத்து வருடங்களாக கூறிவருகிறார். முன்னதாக ரஜினி தமிழக வெற்றிட அரசியல் குறித்து பேசியபோது அதற்கு நாதக பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தது. முதல்வர் பதவியை ரஜினி டார்கெட் செய்யவில்லை என்ற காரணத்தால் அதை வரவேற்றது மட்டுமல்லாமல் நாங்கள் 10 ஆண்டுகளாக உள்ளத்தூய்மையோடு தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் உறுதியாக வெல்வோம் என்று சீமான் கூறியுள்ளார்.
இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் 3 சிறப்பம்சத்துடன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசியதாவது;
தமிழகத்தில் இருக்கும் அதிமுக மற்றும் திமுக போன்ற பெரும் கட்சிகளை எதிர்ப்பது சுலபமல்ல மேலும் அந்த இரு கட்சிகளும் தமிழக அரசியலில் பலமாக உள்ள கட்சியாக உள்ளதாக கூறியவர், தனது கட்சியின் மூன்று சிறப்பம்சங்களை குறித்து தெரிவித்தார்.
- தேவையான அளவு கட்சியின் பதவிகள்
- இளைஞர்களுக்கு மட்டும் 65% பதவி ஒதுக்கப்படும்.
- கட்சிக்காக ஒரு தலைமை செயல்படும், ஆட்சிக்காக ஒரு தலைமை செயல்படும் என்று தனது அரசியல் நிலைப்பாட்டை கூறினார்.