மீண்டும் இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்!! இந்த முறை இப்படி செல்லவிருக்கிறார்!!

0
108
Rajinikanth is going to the Himalayas again!! This time it's going to go like this!!
Rajinikanth is going to the Himalayas again!! This time it's going to go like this!!

மீண்டும் இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்!! இந்த முறை இப்படி செல்லவிருக்கிறார்!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டு வருகின்றார். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார்.

ஆரம்ப காலக்கட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி செய்து வந்தார். 1993 ஆம் ஆண்டு சென்னை திரைபட கல்லூரியில் நடிப்பிற்கான பட்டய படிப்பை படித்து முடித்தார்.

இவர் தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார்.

ரஜினிகாந்த் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு இவரின் வழக்கம் மாறியது.

அதன் பிறகு சில கால இடைவேளைக்கு பிறகு இவர் இமயமலைக்கு சென்றார். அந்த வகையில் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இமய மலைக்கு சென்றார்.

அதனை அடுத்து அவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் இமயமலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் ஆகஸ்ட் 6 ம் தேதி மீண்டும் இமயமலைக்கு கிளம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது உடல் பிரச்னையில் இருந்து தேறி வந்ததால் இந்த முறை யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக இமைய மலைக்கு செல்ல உள்ளார்.

அந்த வகையில் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடக்கும் பட்சத்தில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.

மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைத்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K