ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!! 

0
248
#image_title
ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!! 
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற சொல் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து, இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தனது அசாத்திய ஸ்டைலால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இன்றளவும் கவர்ந்து வரும் ரஜினிகாந்த் என்றுமே நம்பர் ஒன் நடிகர் என்ற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று எத்தனையோ இயக்குனர்கள் ஆசை பட்டு காத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமாருக்கு அந்த அதிர்ஷ்ட வாய்ப்பினை சூப்பர் ஸ்டார் அளித்துள்ளார்.
ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், வியாபார ரீதியிலும் பல கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், வெற்றி படமாக அமையவில்லை என ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களின் ஏமாற்றத்தை தீர்ப்பதற்கு உடனடியாக ஒரு மெகா ஹிட் திரைபடத்தை தர வேண்டும் என ரஜினி முடிவு செய்த நிலையில், இயக்குனர் நெல்சன் அவரை சந்தித்து ஜெயிலர் படத்தின் கதையை கூறியுள்ளார்.
நெல்சன் கூறிய கதை ரஜினிக்கு பிடித்து போகவே ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இப்படமானது பான் இந்தியா படமாக உருவெடுத்துள்ளது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்துவருகின்றனர்.
ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் மட்டும் மொத்தமாக எடுத்து முடித்துள்ளதாகவும், இன்னும் சில மற்ற காட்சிகள் எடுக்க பட வேண்டியுள்ளதால், அந்த காட்சிகளும் எடுக்கப்பட்டு விரைவில் படம் வெளியாகும் என இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கு இப்படம் மாபெரும் திருப்பு முனையாக அமையும் என்ற அவர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் காத்து கொண்டுள்ளனர்.
Previous articleமது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா??
Next articleடாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம் !