டாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம் !

0
159
#image_title
டாஸ்மாக்கில் பீர் தட்டுபாடு! ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம்! 
தமிழக அரசுக்கு எந்த துறையிலிருந்து அதிக வருமானம் வருகிறதோ இல்லையோ மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் அதாவது டாஸ்மாக் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 45,000 கோடி வருமானம் ஈட்டி வருகிறது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக்கின் பங்கு 30 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
இந்த டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் மது பிரியர்கள் அதிகம் வாங்கும் மது வகைகளில் பீர் முதலிடத்தில் உள்ளது. அடிக்கும் கோடை வெய்யிலுக்கு நல்லா ஜில்லுனு பீர் குடித்தால் சுகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் பல இளைஞர்கள் டாஸ்மாக் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது மது பிரியர்களின் ஏக்கத்தை உடைக்கும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மூலம் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தற்போது பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கடைகளில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது, எனவே இதனை தடுக்கவும் தட்டுப்பாடின்றி பீர் வகைகள் கிடைக்க மாநில மதுபான கொள்முதலில் சில மாற்றங்களை செய்து அண்டை மாநிலமான பாண்டிசேரி, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்து பீர் வகைகளை வாங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
பீர் தட்டுபாட்டினால் பல கடைகளில் அரசுக்கு தினசரி வருமானம் குறைந்துள்ளதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அண்டை மாநிலங்களிலிருந்து பீர் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கேட்டு கொள்ள பட்டுள்ளது.