ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய ‘ஜவான்’! முதல் நாள் வசூல் விவரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

Photo of author

By Divya

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய ‘ஜவான்’! முதல் நாள் வசூல் விவரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

Divya

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய ‘ஜவான்’! முதல் நாள் வசூல் விவரம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜவான்’.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார்.இவர்களை தவிர்த்து யோகிபாபு,விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது இப்படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது.சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை விட 50 கோடி அதிகமாக வசூல் செய்து ஜவான் படம் மாஸ் காட்டி வருகிறது.

இந்தியாவில் ‘ஜவான்’ படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட ரூ.75 கோடி.குறிப்பாக இந்தி வெர்ஷன் மட்டும் ரூ.65 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே போல் தமிழகத்தில் முதல் நாள் வசூல் ரூ.5 கோடி என்று சொல்லப்படும் நிலையில் இதுவரை வேற எந்த ஒரு ஹிந்தி படம் செய்யாத சாதனையை ஜவான் செய்துள்ளது என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான ஷாருக்கானின் பதான் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து தூள் கிளப்பியது.இதனால் தற்பொழுது வெளியாகி உள்ள ஜவான் படமும் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவிக்கும் என்று ஷாருக்கானின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் தெரிவித்து வருகின்றனர்.