ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !!

Photo of author

By CineDesk

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !!

CineDesk

Rajini's next film!! Announcement made by Kamal !!

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !!

நடிகர் கமல் அவர்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட தன்னை தயாரிப்பாளராக முன்னிறுத்திக்  கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது பல படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். சிம்புவின் எஸ்.டி.ஆர் 48, சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21, தனுசின் அடுத்த படம் என கமல் தயாரிப்பாளராக பயங்கர பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கமல், ரஜினியின் படத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது அந்த தகவலை கமல் உறுதி செய்துள்ளார். இதை பற்றி நானும் ரஜினியும் பேசியுள்ளோம். ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் அந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கமல் இந்த திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த திரைப்படத்தில் கமல் கவுரவ வேடத்தில் நடித்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படமே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என தகவல்கள் வெளியான நிலையில், ஓய்வு குறித்து ரஜினி இன்னும் எந்த முடிவிற்கும் வரவில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு, வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.