ராமேஸ்வரம் கடற்பகுதி அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காக்க உருவாக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள் !!

0
165

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை காக்க ரூ.3.கோடி செலவில் மீன்வளத் துறையினர் சார்பாக செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா, கடல் பகுதியில் அதிக வகையான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் 117 வகையான பவளப்பாறைகள் காணப்படுகிறது. டால்பின் ,கடல் பசு ,கடல் ஆமைகளும் என 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகளை சார்ந்தே வாழ்ந்து வருகின்றது.

மீன்களின் உறைவிடமாக விளங்கிவரும் பவளப்பாறைகளை, விற்பனைக்காக வெட்டி எடுப்பது பிளாஸ்டிக் கழிவுகள் ,வலைகள் பயன்படுத்தி மீன் பிடிப்பது போன்று செய்வதால் பவளப்பாறைகள் அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் 2050–க்குள் ஆண்டுகளுக்குப் பிறகு பவளப்பாறை முற்றிலுமாக அழிந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அழிந்து வரும் பவளப் பாறைகளை பாதுகாக்க மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் .இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ரூபாய் மூன்று கோடியை, தமிழக மீன்வளத் துறை சார்பாக செயற்கை பவளப்பாறைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.

தமிழக மீன்வளத் துறை சார்பாக மன்னார் வளைகுடா மற்றும் பஞ்சாப் சக்தி கடற்பகுதியில் செயற்கையான பவளப்பாறைகளை அமைப்பதற்கு அரசு சார்பில் ரூ.3 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்காக 2 ஆயிரம் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்குவதற்கு தலா ரூபாய் 15,000 வீதம் மூன்று கோடி செலவில் அமைக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு பவளப்பாறைகள் 5 அடி நீளமும் ,3 அடி அகலமும் உடையதாக இருக்கும் என்றும் மேலும் இதில் வட்டம் மற்றும் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கூறினார்.செயற்கை பவழப்பாறை என்பது அனைத்தும் தொட்டி மூலம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல் பகுதியில் 10 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Previous articleகுண்டு வெடித்ததில் சிறுவன் பலி! துப்பாக்கி வைத்து செல்ஃபி எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் !!
Next articleகாயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !!