பாரம்பர்யத்தில் இருந்து மாடர்னுக்கு மாறிய ரம்யா பாண்டியன் – வரிசை கட்டும் ஆர்மி !
ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன் புடவையில் எடுத்த கவர்ச்சியாக புகைப்படங்களைப் பகிர்ந்து தனக்கென ஒரு ஆர்மி உருவாக்கிக் கொண்டுள்ளார்.

ஜோக்கர் மற்றும் ஆண் தேவதைப் போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டினாலும் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்க்ள் போதுமான ஆதரவைத் தரவில்லை. அதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் புடவையில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றி லைம்லட்டுக்கு வந்தார்.
கடந்த ஆண்டின் பின் பகுதியில் ரம்யா பாண்டியன் ஆர்மி உருவாகும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் இளைஞர்களால் விரும்பி பார்க்கப்பட்டனர். இதையடுத்து வரிசையாக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அவருக்கு மீண்டும் ஏமாற்றமே ஏற்பட்டது.
இதையடுத்து இப்போது மீண்டும் தனது புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். ஆனால் இந்த முறை புடவையில் இல்லாமல் மாடர்ன் உடைகளோடு களமிறங்கியுள்ளார். இதையடுத்து கொஞ்ச நாட்களாக உறங்கிக் கொண்டிருந்த ரம்யா பாண்டியன் ஆர்மி இப்போது விழித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது.