வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட ரஜினியை அசிங்கப்படுத்திய ரஞ்சித்..கோபத்தில் கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்..!!

0
346
Due to the work done by Ranjith, Thangalan film got in trouble.. Will the anger of Rajini fans decrease..??
Due to the work done by Ranjith, Thangalan film got in trouble.. Will the anger of Rajini fans decrease..??

வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட ரஜினியை அசிங்கப்படுத்திய ரஞ்சித்..கோபத்தில் கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்..!!

தனது படங்கள் மூலம் சாதி அரசியல் பேசும் இயக்குனர் ரஞ்சித் அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மெட்ராஸ் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறினார். 

அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்து வரிசையாக காலா மற்றும் கபாலி என இரண்டு படங்களில் நடித்து கொடுத்தார். சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கிய பின்னர் தான் ரஞ்சித் டாப் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அதன் பின்னர் தான் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 

இந்நிலையில், இயக்குனர் ரஞ்சித் நடிகர் ரஜினியை அசிங்கப்படுத்தியதாக கூறி ரஜினி ரசிகர்கள் நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரஞ்சித்திடம் பத்திரிகையாளர் ஒருவர் ”தலித் அரசியலை உங்கள் படங்களில் ரஜினி வழியாக சொல்லி உள்ளீர்கள். இது ரஜினிக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

ஆனால் பிறமொழிகளில் இதுபோன்ற ஒரு பெரிய ஹீரோவை வைத்து இந்த மாதியான படங்களை கொடுக்க முடியாது. அவ்வளவு ஏன் மலையாள சினிமாவில் கூட இதுபோன்ற படங்கள் வரவில்லை” என்று கூறியிருந்தார். இதில் ரஜினி குறித்து பேசும்போது இயக்குனர் ரஞ்சித் ஏளனமாக சிரித்து இருந்தார். 

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் உனக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினியை அசிங்கப்படுத்தி சிரிக்கிறாயா? நன்றிகெட்ட ரஞ்சித் என்று அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். சோசியல் மீடியா முழுவதும் ரஞ்சித்திற்கு எதிரான ஹேஷ் டேக்குகள் தான் டிரெண்டாகி வருகின்றன.