கோவிலுக்கு வந்த பெண்ணுடன் கள்ளக்காதல்: வீடியோவை காட்டி மிரட்டிய பூசாரி கைது!

Photo of author

By Parthipan K

கோவிலுக்கு வந்த பெண்ணுடன் கள்ளக்காதல்: வீடியோவை காட்டி மிரட்டிய பூசாரி கைது!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, மைலேச்சல் பகுதியில் சேர்ந்தவர் வினீஷ் .இவர் மாரநல்லூர் பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கோவிலுக்கு வந்த இளம்பெண் ஒருவருடன் வினீஷுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. வினீஷ் தனக்கு திருமணம் ஆனதை மறைந்த தினேஷ், பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

மேலும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

சிறிது நாட்களுக்கு பிறகு வினீஷ் இளம்பெண்ணை தவிர்த்து வரவே, அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் வினீஷ் திருமணத்திற்கு செய்யவும் மறுப்பு தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணிடம் ஆபாச விடியோவை காட்டி சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார்.

இதனால் காலை மனமுடைந்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பூசாரி வினீஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவில் பூசாரியாக இவ்வாறு செய்தது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.