“உலக கோப்பை இல்லன்னா திருமணமே இல்லை” பிரபல கிரிக்கெட் வீரரால் அதிர்ச்சி.!

Photo of author

By Jayachithra

“உலக கோப்பை இல்லன்னா திருமணமே இல்லை” பிரபல கிரிக்கெட் வீரரால் அதிர்ச்சி.!

Jayachithra

பிரபல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் தன்னுடைய திருமண பற்றி ஓபனாக ஒரு விஷயத்தை பேசியுள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல்., நவம்பர் 14ஆம் தேதி வரை உலக கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுவரை அந்த நாடு ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை.

இத்தகைய நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கான் தற்போது தனது திருமணம் குறித்து ஒரு விஷயத்தை பேசியுள்ளார். அதில், தற்போதைய உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர், “சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட இருக்கிறேன். உலக கோப்பையை கைப்பற்ற கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய திருமணம் குறித்து நான் இப்பொழுது யோசிக்கவில்லை. உலக கோப்பையை ஜெயிப்பது தான் எனது முதல் குறிக்கோள்.” என்று தெரிவித்துள்ளார்.

கோப்பையை கைப்பற்றினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறி இருப்பது பலருக்கும் தற்போது அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. ஆனால், இப்படி உறுதியளிக்கும் பலரும் அதை காப்பாற்றுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.