மன்னிப்பா? அதெல்லாம் முடியாது முடிந்தால் கேஸ் போடு அண்ணாமலை அதிரடி பதில்!

0
81

தமிழக பாஜகவின் தலைவராக பதவி வகித்து வந்த முருகன் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எப்படியேனும் வெற்றி பெற வைத்து விடவேண்டும் என்று ஒட்டுமொத்த பாஜாகவும் முயற்சி செய்தது ஆனாலும் பாஜகவின் முயற்சி வீணானது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின் அடிப்படையில் அவர் வகித்து வந்த மாநில பாஜக தலைவர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய இணை அமைச்சராக தொடர்கிறார். அவருக்கு பின்னர் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார்.

அவர் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் எதிர்வரும் தேர்தலில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது போன்ற அதிரடி கருத்துக்களை அவர் தெரிவித்து வருவதுடன் ஆளுங்கட்சியை சரமாரியாக கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் மின் துறையில் ஏகப்பட்ட பித்தலாட்டங்கள் நடைபெற்று இருக்கிறது என்றும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்றும், அவர் குற்றம் சுமத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கான ஆதாரம் இருந்தால் பொதுவெளியில் வெளியிடுங்கள் இல்லை என்றால் மன்னிப்புக் கேளுங்கள் என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்து இருக்கின்ற அண்ணாமலை மின்சார வாரியம் தொடர்பான புகாருக்கு மன்னிப்பு கேட்க இயலாது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் நான் சந்திக்க தயார் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆதாரம் எதுவும் இல்லாமல் குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் போகிறபோக்கில் இணையதளத்தில் ஆதாரமில்லாமல் அண்ணாமலை போல் இருப்பவர்கள் குற்றம் சொல்லக்கூடாது. மின்துறை மீது புகார் வழங்கியவர்கள் 24 மணிநேரத்தில் ஆதாரங்களை வெளியிடாதது ஏன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார். அதோடு ஆதாரம் இல்லாமல் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் அதற்கு இனி பதில் சொல்லப்போவதில்லை, அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க இயலாது என்று செந்தில்பாலாஜி எச்சரிக்கை செய்திருந்தார்.

அவருடைய இந்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடுத்தால் அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்து இருக்கிறார், இது தற்சமயம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.