ரஷ்மிகா மந்தனா அவர்கள் இந்திய திரைப்படத்தில் நடிக்கும் ஒரு பிரபல நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு கன்னடப் படத்தின் மூலமாக ரசிகர்களுக்கிடையே கவனம் பெற்றார். மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார்.
மேலும், அந்த படத்தின் மூலமாக தெலுங்கு மட்டுமன்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த ‘டியர் காம்ரேட் ‘ என்ற படத்தை தொடர்ந்து, தற்போது தமிழில் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்திலும் நடித்து உள்ளார். மேலும் இவர் பல படங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராமில் 1.92 கோடி பின் தொடர்பவர்களை பெற்று அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும், காஜல் அகர்வால் 1.90 கோடி பின்தொடர்பவர்கள், ரகுள் பிரீட் சிங் 1.72கோடிக்கு மேற்பட்ட பின்தொடர்பவர்கள் மற்றும் ஸ்ருதிஹாசன் 1.70 கோடி பின் தொடர்பவர்களையும் பெற்று உள்ளனர்.
சமந்தா 1.75 கோடி பின்தொடர்பவர்கள் கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் 1.92 கோடி பின் தொடர்பவர்களை பெற்றதால் ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருகின்றனர்.