ரேஷன் அட்டை தாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் !! 200 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!!
இனி ரேஷன் கார்டை வைத்து இனி வேட்டி சேலை வங்க முடியும்.தமிழக அரசு தருகின்ற வேட்டி சேலை பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் நீங்கள் கட்டாயம் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதனை போன்று இந்த வருடமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வருடம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச வேட்டி சேலையுடன் ரூ. 1000 பணம் , 21 வகையான மல்லிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசானது இந்த திட்டத்திற்கு சுமார் 200 கோடி ரூபாயை ஒத்துகியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி ,சேலை வழங்கப்படும் என்றும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த திட்டத்தில் 1,68,00,000 என்ற எண்ணிக்கையில் சேலைகள் அதன்பின்பு 1,63,00,000 என்ற எண்ணிக்கையில் வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது என்றும் அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதனை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையை குறித்து தலைமை செயலாளர் ,வருவாய்த் துறை அதிகாரிகள் ,கூட்டுறவு துறை அதிகாரிகள் ,நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் கைத்தறி ஆணையர் என்று அனைவரும் அடங்கிய குழுவை அமைத்துள்ளனர்.
இதன் படி அனைத்து ரேஷன் அட்டை அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை முறையாக வழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த தொகுப்புகள் அனைத்தும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகேவே வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.