ரேஷன் அட்டைகளுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி!! அரசு அதிரடி!!

0
159

ரேஷன் கார்டுகள் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

ஒரு இந்திய குடிமகனாக இருக்கும் அனைவருமே ஆதார் அட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும். ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கிய 12 இலக்க எண், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பொது விநியோக முறை, வருமானவரி போன்றவற்றில் அடையாள அங்கீகாரத்திற்காக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் காரணமாகவே ஆதார் அட்டை வைத்திருப்பது மட்டுமில்லாமல் பான் கார்டுடன் இணைப்பது மற்றும் ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. மேலும், அவ்வகையில் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு அதற்கான காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது.

இதனை குறித்து கேள்வி ஒன்றிற்கு மத்திய அரசு நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு பொது விநியோகத் துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்கள் அவைக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ‘இதுவரை தேசிய அளவில் சுமார் 92.8% விழுக்காடுகள் பயனாளிகளின் ஆதார் மூலம் விதைக்கப்பட்டு உள்ளன.

மேலும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தந்த ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறைவு செய்து உள்ளன. ரேஷன் கார்டுகளில் ஆதார் இணைக்கும் பணிகள் மற்றும் 8 மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்களில் முன்னேறி வருகின்றது.

மேலும், ஆதார் எண்ணை ரேசன் கார்டுகளுடன் இணைப்பதற்கு காலக்கெடு செப்டம்பர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட இருக்கின்றது என்பதனை அவர் தெரிவித்தார். எனவே ஆதார் எண்ணை ரேசன் கார்டுடன் அனைவரும் உடனடியாக இணைக்க வேண்டும்.

Previous articleசசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!
Next articleகவர்ச்சியின் உச்சம்!! இறுக்கமான உடையில் ஜம்முனு,கும்முனு இருக்கும் யாஷிகா!!