சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

0
82
Jayakumar's check point for Sasikala! Supporters in shock!
Jayakumar's check point for Sasikala! Supporters in shock!

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல்கள் வந்தது. அதனை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவரின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 24 மணி நேரமும் மருத்துவர்களின் நேரடி கட்டுபாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் உடல் நிலை குறித்து ஆஸ்பத்திரி வட்டாரத்தில் விசாரித்தபோது தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவே சொல்கிறார்கள். இந்த நிலையில் அதிமுக கொடியுடன் உடைய காரில் சசிகலா மருத்துவமனை வந்துள்ளார். அங்கே எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்து விட்டு வெளியே செல்லும் வரை காரிலேயே காத்திருந்த சசிகலா பின்னர் மருத்துவமனைக்கு உள்ளே சென்று அங்கு டாக்டர்களிடம் மதுசூதனன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டிருந்த மதுசூதனனை சந்திப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால்  அவரது காரில் அதிமுக கொடியை எப்படி கட்டி செல்லலாம்? அதிமுகவுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சம்பந்தமில்லாமல் எப்படி அதிமுக கொடியை ஒருவர் பயன்படுத்த முடியும். அதிமுக கொடியை கட்டுவதற்கு சசிகலாவிற்கு எந்த உரிமையுமில்லை. எம்ஜிஆர் மனைவி ஜானகி விட்டுக் கொடுத்தது போல சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும். அதிமுக ஒரு காலத்தில் ஜானகி அணி,  ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜானகி அம்மாள் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்னால் பிரியக்கூடாது.

அதிமுக கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கூறி அவரே விலகிக் கொண்டார். அதேபோல அதிமுக இணைப்பிற்கு சசிகலா தடையாக இருக்கக்கூடாது. மேலும் உதயநிதி ஸ்டாலின் படத்தை தலைமைச் செயலகத்தில் வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.