டாப் 2 இடங்களை பிடிக்க பெங்களூர் அணி போராட்டம்.!! டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு.!!

0
150

இன்று நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பௌலிங் தேர்வு.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் 52 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பௌலிங் தேர்வு.

இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று எப்படியாவது முதல் இரண்டு இடங்களை பெற முயற்சிக்கும். அதேபோல், ஹைதராபாத் அணியும் இந்த சீசனில் ஆறுதல் வெற்றியை பெற போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணி வீரர்கள்;

விராட் கோலி (சி), படிக்கல், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஸ்ரீகர் பாரத் (வ), ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

ஹைதராபாத் அணி வீரர்கள்;

ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (w), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக்.

Previous articleவிவாகரத்துக்குப் பிறகு சமந்தா வெளியிட்ட புகைப்படம்.!! சமந்தாவுடன் இருப்பது யார்.!!
Next articleதளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!