மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று! இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் பீதியடையும் மக்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு,போட்டி தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.இந்நிலையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனாவில் மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் எழுச்சி பெற தொடங்கியது.
அதனால் சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இரண்டாவது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. கொரோனா பரவல் அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் வந்தது. கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து பரிசோதனைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று முதல் கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 462 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியானது அந்த முடிவில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கோவையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,323 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.