அமைச்சரவையிலிருந்து விலக தயார்.. தவெக-வின் கூட்டணியில் இல்லை!! திருமா போட்ட குண்டு!!

அமைச்சரவையிலிருந்து விலக தயார்.. தவெக-வின் கூட்டணியில் இல்லை!! திருமா போட்ட குண்டு!!

TVK VSK:தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவானது, யாரும் எதிர்பார்க்காததாக இருந்தது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமானது யார் கூட்டணியுமின்றி 108 இடங்களில் வென்றனர். ஆனால் சட்டமன்றத்தில் இடம் பெறுவதற்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், விசிக முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்தனர். இதில் காங்கிரசைத் தவிர்த்து இதர கட்சிகள் கூட்டணியில் இருப்பதை தற்போது வரை சரிவர உறுதிப்படுத்தாமலே உள்ளனது.

குறிப்பாக விசிக வின் திருமா, நாங்கள் திமுகவின் கூட்டணியை விட்டு வெளியேறவில்லை என கூறி வருகின்றார். மாறாக விஜய்க்கு ஆதரவு மட்டுமே தெரிவித்துள்ளோம். இதற்கு முக்கிய காரணமாக ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பது தான் என கூறினார். ஆனால் தவெ-வில் இணைந்ததற்கு பலனாக 27 ஆண்டுகளில் நடக்காத ஒன்று அவரது உறுப்பினர்களில் ஒருவர் அமைச்சரவையில் இடம் பிடித்தது தான்.

ஒரு பக்கம் அமைச்சரவையில் தங்களின் நிர்வாகி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆதரவு ஒப்பந்தம் என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை காங்கிரசை போல நாங்கள் தவெக கவின் விஜய்யுடன் கூட்டணியில் உள்ளோம் என்பதை விசிக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று திருமா, விஜய்யின் தவெக உடன் நாங்கள் கூட்டணியில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவையிலிருந்து வெளியேறி விடுவோம் என தெரிவித்துள்ளார்.

தவெக வின் விஜய் ஆட்சியில் அமர ஆளுநரிடம் பெரும்வாரியை காட்டுவதற்கு, ஆதரவு கொடுக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் கூட்டணி கட்சிகள் அலை கழித்த ஈரமே இன்னும் காயாத நிலையில், திருமாவின் இந்த பேச்சு விஜய்க்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.