மத்திய அரசு திட்டத்தில் ரூ.55,000 கோடி ஊழல்? அமைச்சர் பதவி போக இதுவே காரணம்-காங்கிரஸ் குற்றசாட்டு

0
122
Modi with Amit Shah
Modi with Amit Shah

மத்கிய அரசு திட்டத்தில் ரூ.55,000 கோடி ஊழல்? அமைச்சர் பதவி போக இதுவே காரணம்-காங்கிரஸ் குற்றசாட்டு

சமீபத்தில் மத்தியில் அரசில் அமைச்சர் பதவி வகித்து சிலருக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.அந்த வகையில் ஏற்கனவே பதவி வகித்த 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.அதில் முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் ஒருவர்.ஆனால் இவரின் பதவி பறிபோனதற்கு காங்கிரஸ் கட்சி ஊழலை காரணமாக குற்றம் சாட்டியுள்ளது

ஊழல் புகார் காரணத்தினால் தான் ரவிசங்கர் பிரசாத்திடமிருந்து மத்திய  அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த பாரத் நெட் திட்ட ஊழல் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் திட்டமான 6 லட்சம் கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி அளிக்கும் பாரத் நெட் திட்டத்தில் தான் இந்த நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடானது சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளதாக காங்கிரஸ் கட்சி  தெரிவித்துள்ளது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் இணைய வசதி அளிப்பதற்கான பல பணிகள், வெறும் கோப்புகள் அளவில் மட்டுமே உள்ளதாக சிஏஜி கூறியிருப்பதையும் காங்கிரஸ் அதில் சுட்டிக் காட்டியுள்ளது.

Reason for Ravi Shankar Prasad Resignation
Reason for Ravi Shankar Prasad Resignation

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2020 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சிஎஸ்சி என்ற பொதுச்சேவை மையங்களுக்கு சுமார் 503 கோடி ரூபாய் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த யு.எஸ்.ஓ.எஃப் எனப்படும் சர்வதேச சேவை பொறுப்பு நிதி அமைப்புக்கு ரூ.55,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த நடைமுறைகளும் பின்பற்றாமல் அரசின் நிதி தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறு நிதி முறைகேடு நடைபெற்றதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது.மத்திய அமைச்சரவையிலிருந்து ரவிசங்கர் பிரசாத் நீக்கப்பட இதுதான் காரணமா? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.அதுமட்டுமில்லாமல் இத்தகைய முறைகேட்டுக்கு அமைச்சரவையிலிருந்து நீக்குவது மட்டும் போதுமானதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த நிதி முறைகேடு குறித்து உயர்மட்ட குழு அமைத்து குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயம் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Previous articleபிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைய என்ன பரிகாரம்?
Next articleநினைத்ததை முடிக்கும் பரிகாரம்!