பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைய என்ன பரிகாரம்?

0
89

கும்பகோணத்தை அடுத்து இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம் காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும், இருந்தாலும் இந்த ஸ்ரீ வாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்புக்குரியது இந்த திருத்தலம் என்று சொல்லப்படுகிறது.

இந்த திருத்தலத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி அளிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி உள்ளிட்ட சனிகளுக்கு பரிகார தலமாகவும் இந்த திருத்தலம் விளங்குகிறது. இங்கு ஆயுஷ் ஹோமம் சஷ்டியப்த பூர்த்தி செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இங்கே இருக்கின்ற குப்த கங்கையில் நீராடிவிட்டு பித்ரு காரியங்களை மேற்கொண்டால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ராகு கேதுவை வழிபட்டு வந்தால் காலசர்ப்ப தோஷம் நீங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தளத்தில் ஒரு இரவு தங்கினால் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தியை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த தளத்தின் தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி இறைவனையும், பார்வதி தாயாரையும் மற்றும் மகாலட்சுமியை வணங்கினால் பிரிந்த தம்பதியர் ஒன்றினைவர் என்று சொல்லப்படுகிறது.