போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் தற்போது அனைத்து பகுதிகளும் நகரமாக உருவெடுத்து கொண்டு வருகிறது. அதனால் மக்களுக்கு போக்குவரத்து தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் முக்கிய பகுதிகளான சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படுகிறது.எனவே, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசு போக்குவரத்து கழகமானது சில முக்கிய பணிகளை தினம் தோறும் செய்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கென 812 பேரை நியமிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இதற்கான பணி நியமனத்திற்கு தேர்வுகளை நடத்த இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பவர்கள் கும்பகோணம், சேலம், கோவை, மதுரை மற்றும் நெல்லை போன்ற போக்குவரத்துக் கழகங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழகத்தில் 176 பேரும், சேலம் மாவட்டத்தில் 256 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அறுபது பேரும், மதுரையில் 136 பேரும் என மொத்தமாக 812 பேரை பணி நியமனம் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தினம் தோறும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகமானது மும்மரமாக அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.