கேரளாவில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததை காண முடிந்தது. மிக மிக கனமழை பெய்யும் என்பதால், அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை ரெட் அலார்ட் எச்சரிக்கை குறிக்கிறது. அதேபோல், ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை என்றால், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ஆகையால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிர்வாக ரீதியாக விடப்படும் அறிவுறுத்தல் ஆகும்.
ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்பதால் கேரள கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.