புதிய அம்சங்களுடன் ரெட்மி 5 ஜி !! ஆகஸ்ட் முதல் இந்தியாவில் விற்பனை!!

Photo of author

By Parthipan K

புதிய அம்சங்களுடன் ரெட்மி 5 ஜி !! ஆகஸ்ட்  முதல் இந்தியாவில் விற்பனை!!

இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது.

இவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ரெட்மி பயனாளர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அந்த  வகையில் ஆகஸ்ட் 1 ம் தேதி  ரெட்மி 12 என்ற ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்துள்ளது.

இதனை வாங்க விரும்பும் பயனாளர்கள் முன்பதிவு செய்ய  MI வலைதளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று நிர்வாகம் கூறியுள்ளது.

இதனை விளம்பரம் செய்ய சியோமி நிறுவனம் பாலிவுட் நடிகையான திசா படானியை இந்த பிரோமாவிற்காக பயன்படுத்தி உள்ளது.மேலும் இந்த ரெட்மி 12 ஸ்மார்ட் போனில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளதாக சியோமி நிறுவனம் கூறியுள்ளது.

அந்த வகையில்,50 MB பிரைமரி கேமரா,6.79 இன்ச்  ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் ,8 MB அல்ட்ரா வைடு கேமரா,5000 MAH பேட்டரி ,IP53  தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிடென்ட்,2 MB மேக்ரோ சென்சார் ,மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 4ஜிபி ரேம் மற்றும்  128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி அமைப்பின் விலை 8999 ரூபாய் என்றும் இந்தநிலையில் உள்ள 5 ஜி ரகம் 10999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த போனை வாங்கும் ஆர்வம் உள்ள நபர்கள் எம்ஐ ,அமேசான் ,பிளிப்கார்ட் உள்ளிட்டா இணையதளங்களின் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.மேலும் இந்த விற்பனை இந்தியாவில் ஆகஸ்ட் 4 ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்க உள்ளதாக ரெட்மி நிறுவனம் அறிவித்துள்ளது.