வெறும் 10 ரூபாயில் உடல் பருமனை குறைக்கலாம்! உடனே வாங்கி ட்ரை பண்ணுங்க!

0
290

வெறும் 10 ரூபாயில் உடல் பருமனை குறைக்கலாம்! உடனே வாங்கி ட்ரை

உடல் பருமன் மக்களை அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. இதனால் எடை அதிகம் உள்ளவர்கள் சாதாரணமாக நடக்கும் போது மூச்சு விட சிரமப்படுகின்றன.

இதற்கு மருத்துவ சிகிச்சைகள் பல இருந்தாலும் அது பக்க விளைவுகளை உருவாக்குவதாகவும் உள்ளது. இதனால் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து உடல் பருமன் குறைப்பது நல்லது.

தினமும் ஒரு கப் கருஞ்சீரக டீ குடித்து வருவதால் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும்.

 

தேவையான பொருள்கள்

 

கருஞ்சீரகம் – 1ஸ்பூன்

கொள்ளு -1 ஸ்பூன்

புதினா – 1 கைப்பிடியளவு

இஞ்சி – 1 துண்டு

பனங்கற்கண்டு

செய்முறை:

1. கருஞ்சீரகத்தை வாணலில் போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

2. கொள்ளு வாணலில் போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

3. வறுத்த கலவையை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள்.

4. இப்பொழுது இந்த பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

5. அடுப்பில் பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி இஞ்சி ஒரு துண்டு, புதினா ஒரு கைப்பிடி அளவு, கருஞ்சீரகம் மற்றும் எள்ளு பொடி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

6. கொதித்த பின் அதனை வடிகட்டி அதனுடன் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

நீங்கள் பொதுவாக டீ குடிக்கும் நேரங்களில் இந்த டீயைக் இரண்டு வேளை குடிக்கலாம்.

ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இந்த கருஞ்சீரக டீ குடிப்பது நல்ல பலன் கிடைக்கும். ஒரே வாரத்தில் உங்கள் உடல் பருமன் குறையும் அதிசயத்தைக் காண முடியும்.

Previous articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!
Next articleசிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here