கை கால் பாதங்களில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறைய! இதோ சூப்பர் டிப்ஸ்!
உடலில் எந்த பகுதிகளில் திரவம் தேங்கினாலும் அவை வீக்கமாக காணப்படுகின்றது. மேலும் அந்த வீக்கத்தை தானாக மறையும். ஆனால் அவ்வாறு மறையாமல் நீண்ட நாட்கள் வீக்கம் இருந்தால் மருத்துவரை சென்று பார்ப்பது மிக அவசியமாக உள்ளது.
அந்த வகையில் பாதம் அல்லது கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் வீக்கம் ஏற்படுகின்றது. பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது அவசியம். இந்த வீக்கத்துடன் நெஞ்சு, வலி, மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வீக்கத்தை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
திரவம் தேங்குவதின் காரணமாகத்தான் வீக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு வீக்கம் உள்ளவர்கள் தண்ணீர் குடித்தால் வீக்கம் உடனடியாக குறைய தொடங்கும். ஒருவர் தினந்தோறும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடம்புக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படும்.
நாம் அமர்ந்திருக்கும் பொழுது கால்களை உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கால்களை உயர்த்தி வைக்கும் பொழுது கால்களில் மீது எந்த சுமயும் வைக்க கூடாது அவர் செய்த வீக்கம் குறைய தொடங்கும்.
அதனையடுத்து வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து காலை ஊற வைத்தால் வீக்கம் மற்றும் வலிகள் குறையும்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க காரணம் பொட்டாசியம் குறைபாடு தான் அதனை சரி செய்ய சர்க்கரைவள்ளி கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட உணவுகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதனால் அதனை நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் உள்ள கழிவுகள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டாலும் அவை உடனடியாக குறைந்து விடும்.