கிராமப்புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது நடைபெற்று வரும் எதற்கும் உதவாத விடியல் ஆட்சியில் உறுதியான முடிவெடுக்கும் திறனற்ற ஸ்டாலின் ஆட்சி பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது கண்டத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
இலவச பேருந்தை மகளிர்க்கு அறிவித்துவிட்டு மற்றொருபுறம் மகளிர்களை ஓசியில் பயணம் செய்பவர்கள் என்று கேலி பேசி அமைச்சர் பொன்முடி மக்களின் கண்டனத்தை பெற்றது நாடே அறியும்.
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு பேருந்துகள் கூட வாங்கப்படவில்லை, அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கினால் அரசுதான் நிதி அளித்து சீர்செய்யவேண்டும். அதை விடுத்து கிராம புற பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பது எந்த வகையில் நியாயம் என்று கூறியுள்ளார்.
மேலும் உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி மாநிலத்தில் கிராம புறங்கள் மற்றும் நகர் புறங்களில் தங்குதடையின்றி மக்களுக்கு சேவை வழங்கவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.