மீண்டும் இணையும் ஓபிஎஸ் இபிஎஸ்? பிரதமரால் முடிவுக்கு வரும் ஒற்றைத் தலைமை!
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை பிரச்சனை நிலவி வருகிறது. இந்த உட்கட்சி மோதலானது பல கட்சிகளுக்கு பலத்தை அளிக்கிறது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததால் பல கட்சிகளும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இறுதியில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கு தனது அனுமதியும் பெற வேண்டும், எனவே இந்த இடைக்கால பொதுச் செயலாளர் பதவி செல்லாது என பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இது குறித்து நீதிமன்றத்திலும் மனு தொடுத்திருந்தார். நீதிமன்றமோ பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து விட்டது. இந்நிலையில் பிரதமர் தமிழகம் வருவதை ஒட்டி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று பேசப்பட்டு வந்தது.
அவ்வாறு இல்லையென்றால் வரவேற்கும் பொழுது ஒருவரும் திருப்பி அனுப்பும் பொழுது மற்றொருவரும் இருப்பார்கள் என்றும் கூறிவந்தனர். ஆனால் அனைவரும் எதிர்பார்க்காத வகையில் மோடி அவர்கள் இருவரையும் ஒன்றாக அழைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மதுரை விமான நிலையத்தில் மோடி வரும்பொழுது ஒன்றாக சேர்ந்து அவரை வரவேற்றனர்.
அதேபோல அவர் ஆந்திராவுக்கு செல்லும் பொழுதும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அருகருகே இருந்து அவரை வழி அனுப்பி வைத்தனர். மேலும் நரேந்திர மோடி அவர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வழங்கிய மலர் கொத்தை ஒரே நேரத்தில் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கட்சியின் நலன் கருதியும் இதர கட்சிகளின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் இவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று மோடி கூறியது போல் உள்ளது. அதனால்தான் இவர்கள் ஒன்று போல வந்து பிரதமரை வழி அனுப்பி வைத்துள்ளனர் என்று அரசியல் சுற்று வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.