தோனி தயாரிக்கும் படத்தின் தேதி வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
எம்.எஸ்.தோனி முன்னாள் இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன். இவர் பற்றி தெரியாதவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் எங்குமில்லை. இவர் உலக அளவில் புகழ் பெற்ற இந்தியா கிரிக்கெட் வீரர். தோனி கேப்டனாகவும் ,சிறந்த வீரராகவும் இந்தியாவிற்கு பல கோப்பைகளை வென்று தந்தவர். இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் தமிழ்நாட்டிற்காக 5 முறை கோப்பையை வாங்கி தந்துள்ளார். இது போன்று அவர் பல சாதனைகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரும் இவர் மனைவி சாகக்ஷியும் இணைந்து தோனி என்டர்டேய்ன்மென்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த மூலம் ரோர் ஆஃப் தி லயன் என்ற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படம் மற்றும் வுமன்ஸ் டே அவுட் என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள்.
மேலும் சென்னையில் தோனி விளையாட தொடங்கிய காலம் முதல் இதுவரை தமிழ் ரசிகர்கள் அதிக அளவில் அன்பை செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்ரி செலுத்தும் வகையில் இவர் தயாரிக்கும் முதல் படத்தை தமிழ் தயாரிக்க முடிவு செய்தார்.
இந்த படத்தை இயக்குனர் தமிழ்மணி இயக்குகிறார். இந்த படத்திற்கு எல்ஜிஎம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யான் நடித்துள்ளர். மேலும் இந்த படத்தில் இவனா , நதியா, வினோதினி, யோகி பாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது ஜூலை 28 ஆம் தேதி திரையரங்கில் வெளிவரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு தோனி ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.