இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தீர்மானம் – நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Photo of author

By Savitha

இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தீர்மானம் – நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Savitha

இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தீர்மானம் – நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவை மே 9ம் தேதி வரை அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, கர்நாடக மாநில அரசு கடந்த மாா்ச் 24ம் தேதி ஆணை பிறப்பித்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் கர்நாடக அரசுக்கு எதிரான கடுமையான எதிர்குரலாகவும் வலுத்தது.
இதற்கிடையே, இந்த 4% இடஒதுக்கீடு ஒக்கலிகா, லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும் எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவில் இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு பெறலாம் எனவும் கர்நாடக அரசு அறிவித்தது.
மே 10ஆம் தேதி கர்நாடக சட்டப் பேரவைத் தோ்தல்  நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட அரசின் இந்த நடவடிக்கை விமா்சனங்களுக்கு வழிவகுத்தது.
இதனை அடுத்து கர்நாடக அரசின் அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் விசாரணையின்  போது, இரு தரப்பிலும் இருந்து வலுவான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இருதரப்பு நியாயங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவை மே 9ம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.