திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்!

0
143
#image_title

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்!

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட, தமிழக அரசின் “அவனுள் அவள்” திட்டத்தின் கீழ் உடலுக்கு பயன் தரும் பனைப்பொருள் விற்பனை நிலையம் முதன்முதலாக நாகையில் துவக்கம். தகாத செயலில் ஈடுபடாமல், கௌரவமாக வாழ்வோம் திருநங்கைகள் உறுதி.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் “அவனுள் அவள்” திருநங்கையர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்ட மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு முதன் முதலாக விற்பனை நிலையம் அவர்களுக்கு அமைத்து தரப்பட்டுள்ளது.

இந்த பனை பொருள் விற்பனை நிலையத்தில், பாக்கெட் பதநீர் , கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், சில்லுகருப்பட்டி, பனம்பழச்சாறு, பனை ஓலையில் உருவாக்கப்பட்ட கூடைகள், பெட்டிகள், சுக்கு காபித்தூள் மற்றும் காதி கிராஃப்ட்டின் கைவினை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த விற்பனை நிலையத்தினை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். சத்துள்ள பனைப்பொருட்களை மக்களிடம் கொண்டு சென்று சந்தைப்படுத்தும் வகையிலும், திருநங்கைகளின் வாழ்வு மேம்படவும் தமிழக அரசு எடுத்து வரும் முயற்சி என்பது அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு ஏற்படுத்தி தந்த வாய்ப்பை திருநங்கைகளான தாங்கள் பயன்படுத்திக் கொண்டு உடலுக்குத் திறன் தரும் பனைப்பொருள் விற்பனையை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், பிற திருநங்கைகளும் தகாத செயலில் ஈடுபடாமல் அவர்களும் இது போன்ற கௌரவமான பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் உறுதிபட கேட்டுக் கொண்டுள்ளனர்.

author avatar
Savitha