திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் – சுவையாக செய்வது எப்படி?

0
77
#image_title

திரும்ப திரும்ப சாப்பிடத்தூண்டும் இறால் பொடிமாஸ் – சுவையாக செய்வது எப்படி?

கடல் இறாலில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளன. அது தவிர, வைட்டமின் டி உள்ளது. மேலும், உடல் எடையை குறைக்க இறால் உதவி செய்கிறது. அதனால், கடல் உணவை விரும்பி உண்ணலாம். மேலும், இறால் சாப்பிடுவதால் சருமம் அழகாக மாறும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் உங்கள் சருமம் மிளிரும்.

தேவையான பொருட்கள்

இறால் -1 கிலோ

வெங்காயம் – 4

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகு தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

கொத்தமல்லி தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

பின்னர், இறாலை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர், பொடியாக நறுக்கிய இறாலை சேர்த்து, மிளகு தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் பொடிமாஸ் தயார்.

Previous articleபன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது தெரிந்தால் அதை ஒதுக்கி விடுவீர்கள்!!
Next article100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!!