தலைநகரில் குடியரசு தின விழா! தமிழக அலங்கார ஊர்தியும் தேர்வு!

Photo of author

By Amutha

தலைநகரில் குடியரசு தின விழா! தமிழக அலங்கார ஊர்தியும் தேர்வு!

தலைநகர் டில்லியில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில்  நடத்தப்படும் அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட மூன்று மாதிரி அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்றாண்டு அனுமதி மறுத்த நிலையில் இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சாதனையாளர் உள்ளிட்ட மூன்று மாதிரிகளை தமிழக அரசு தமிழக அரசு வழங்கியிருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது.

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது. இதில் முப்படைகள், மத்திய ஆயுதப்படைகள்,  பிற துணை படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடத்தப்படும்.

இதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசின் சார்பில் வ .உ.சி,வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து அலங்கார ஊர்தி வாகனம் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதற்கு மத்திய அரசின் பாதுகாப்பு வல்லுநர் குழு அனுமதி மறுத்து விட்டது. தமிழக மட்டுமில்லாமல் கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரா,தெலுங்கானா  ஆகிய மாநிலங்களின் வாகன உறுதிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது அது அப்போது பெரிய பிரச்சினையை கிளப்பியது.

இதனை அடுத்து நடப்பாண்டு குடியரசு தின விழாவிற்கு மகளிர் சாதனையாளர் உட்பட 3 அலங்கார மாதிரி ஊர்திகளை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது .இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில் இறுதியாக தமிழகம் உட்பட 16 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பிற்காக  தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா குஜராத், ஹரியானா, அஸ்ஸாம், மற்றும் உத்தரப்பிரதேச அலங்கார ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.