யூடியூப் பிரபலத்தின்  மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎப் வாசன்!

0
136
Another case filed against the YouTube celebrity! TDF Vasan, which continues to be involved in controversy!
Another case filed against the YouTube celebrity! TDF Vasan, which continues to be involved in controversy!

யூடியூப் பிரபலத்தின்  மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎப் வாசன்!

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்த செந்தில் என்பவர் கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் உள்ள விக்கேஷ் வீட்டில் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் ஒன்றை கட்டியிருந்தார்.அந்த கடையின் திறப்பு விழாவிற்கு யூடியூபில் புகழ் பெற்ற டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் பேனர் வைத்துள்ளனர்.அதனை கண்ட போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர்  என  கூறி செந்தில் மற்றும் அவருடைய உறவினர் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அதனையடுத்து அவர்களை  ஜாமீனில் விடுத்தனர்.மேலும் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நடந்த அலுவலக திறப்பு விழாவிற்கு டிடிஎப் வாசன் கடலூர் சென்றார். அவரை காண்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பைக்கில் கடலூர் புதுப்பாளையத்தில் குவிந்தனர்.அதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அதனையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கு இருந்து செல்லும்படி கூறியும் யாரும் கண்டு கொள்ளாத நிலையில் தடியடி நடத்தினார்கள்.

மேலும் அனுமதி பெறாமல் கூட்டம் சேர்த்த காரணத்தால் டிடிஎப் வாசன், செந்தில், விக்கேன்ஷ் உள்பட 300 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அதனை தொடர்ந்து டிடிஎப் வாசன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் போலீசார் பொய்யான காரணங்களை கூறி என்னுடைய ரசிகர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.மேலும் இதுபோன்ற வழக்குகள் எல்லாம் எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல என போலீசாரை கிண்டல் செய்து பேசினார்.

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.நேற்று வடபழனியில் உள்ள தியேட்டரில் ஒரு படத்தின் முன்னோட்டத்தை காண டிடிஎப் வாசன் வந்தார்.அப்போது அவர் வந்த காரில் நம்பர் பிளேட் இல்லை.அதனை அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். டிடிஎப் வாசன்  வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.டிடிஎப் வாசன் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தார்.அப்போது இந்த இது குறித்து டிடிஎப் வாசனுக்கு தகவல்  தெரிவிக்கபட்டது. அந்த தகவலின் பேரில் டிடிஎப் வாசன் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்றார்.

அங்கு சென்ற டிடிஎப் வாசனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர் இந்த கார் என்னுடையது இல்லை நான் என்னுடைய நண்பரின் காரில் தான் வந்தேன் என கூறினார்.ஆனால் அந்த காரணத்தை போலீசார் ஏற்றுகொள்ளத நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K