நீதிமன்றங்களை திறக்க பார் கவுன்சில் சார்பாக கோரிக்கை

0
68

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சென்னை உயர் நீதிமன்றம் , உயர் நீதிமன்ற மதுரை கிளையும், கீழமை நீதிமன்றங்களும் வழக்கமான செயல்படாமல் ஊடங்கால் மூடப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் தொடர்ந்து தற்பொழுது வரை 150 நாட்களுக்கு மேற்பட்ட நாட்களில் வந்த வழக்குகளை தீர்க்காமல் அப்படியே இருப்பதனால் தேக்கம் அதிகமாக உள்ளதென்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அவர்கள் கூறினார்.

இருப்பினும் மே மாதத்தில் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் திறந்து நேரடி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.ஆனால் கொரோனா. நோய்த் தொற்று ஏற்பட்டதால் விசாரணையை நடத்த இயலாமல் போனது.மேலும் காணொலிக் காட்சி மூலமாக விசாரணை நடத்தப்பட்ட வந்த நிலையிலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விசாரணை சரியாக நடத்த இயலாமல் போனது. இதனால் உயர்நீதிமன்றம் நேரடி விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று பார் கவுன்சில் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

author avatar
Parthipan K