கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

0
62

கொரோனாத் தொற்று அனைத்து உலக நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.உலகளவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2.1கோடியாக உயர்ந்துள்ளது.உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7.67 லட்சம்.இதுவரை உலக அளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1.4 கோடி பேர்.

அமெரிக்கா,ரசியா,பிரேசிலை காட்டிலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 63.9 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.இந்தியாவில் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 50084 என்ற தகவல்கள் கூறப்படுகின்றன.

நாளுக்கு நாள் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டு வருகின்றது.இதனால் மக்களை முறையான சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.