மீண்டும் தொடரும் கஞ்சா விற்பனை?..உடந்தையாக இருந்த ஏட்டு உடனடி சஸ்பெண்டு..
சேலம் மாநகரில் அடிக்கடி கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு அடுத்தடுத்து தகவல் வந்துகொண்டே இருந்தது.பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கஞ்சா பொருளை உபயோகித்து வருகிறார்கள்.
இருந்தாலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் இதை வாங்கி விற்கும் அவலம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதனை பொதுமக்கள் தொடர்ந்து காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் குட்கா பொருட்கள் விற்பவர்களை பிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மேலும் ஒரு சில போலீசார் கஞ்சா விற்பவர்களுக்கு உதவி புரிவதாக போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடாவிற்கு ரகசிய தகவல் வந்தது.
இது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு துணை கமிஷனர் லாவண்யாவுக்கு அவர் உத்தரவிட்டார். விசாரணையில் சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டு முனியன் கஞ்சா விற்றவருக்கு உதவி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஏட்டு முனியனை பணி இடைநீக்கம் அதாவது சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டுள்ளார்.இதனால் காவல் அதிகாரிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.