மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்:

0
120
#image_title

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்:

டெங்கு காய்ச்சலானது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்த நோயானது மனிதனின் நியூட்ரஸ் அளவை குறைத்துக் காய்ச்சலை உண்டாக்கக்கூடியது.

பெரும்பாலும் கொசுக்கள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த கொசுக்களின் மூலமே டெங்குகாய்ச்சல் மக்களிடையே எளிதாகப் பரவுகிறது.

கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக இந்த டெங்குகாய்ச்சல், மக்களுக்கு ஒரு ஆட்டம் காட்டிவிட்டுச் சென்றது.

டெங்குகாய்ச்சலுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் இன்னும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது.

அவ்வாறே சென்னை மதுரவாயில் பகுதியில் ரக்சன் என்ற சிறுவனுக்குப் பலத்த காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்தபோது அதில் டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.

அதனையடுத்து சிறுவனின் பெற்றோர்கள்,அடுத்த கட்ட சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தை நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

4வயதான சிறுவன் இந்த டெங்குகாய்ச்சலுக்கு பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பெற்றோர்கள், அளித்த புகாரின் பெயரில், அப்பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதாகவும், அதைத் துப்புரவு செய்ய எந்த அரசும் முன் வரவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அச்சிறுவனின் பெற்றோர்கள் புகார் அளித்ததற்குப் பின்பு, சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்விடத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இது மழைக்காலம் என்பதால், ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீர்களைச் சுத்தம் செய்யவும்,சுகாதார சீர்கேடுகள் வராமல் பாதுகாக்கவும், பொதுமக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous article‘பாரத்’ குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜு தெரிவித்த பதில் என்ன தெரியுமா? அட இது நல்லா இருக்கே!!
Next articleஎல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!