ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!!

0
32
#image_title

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!!

நடக்கவிருக்கும் ஒருநாள் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் 24 வயதான இளம் வீரர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.

24 வயதாகும் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அவர்கள் முதன் முதலாக 2016ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மூலமாக சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். மொத்தமாக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நவீன் உல் ஹக் அவர்கள் ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கடந்த 2022ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2023ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசினார். இதையடுத்து நடப்பாண்டு உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் பேட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் நவீன் உல் ஹக் அவர்கள் “இது மிகவும் எளிமையான முடிவு கிடையாது. இருப்பினும் என்னுடைய விளையாட்டு வாழ்க்கையை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த கடினமான முடிவை எடுத்துதான் ஆக வேண்டும். நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் என்னுடைய ஓய்வு முடிவை அறிவிக்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.