புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!!

0
96
#image_title

புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!!

புரட்டாசி மாதம் தொடங்கி பத்து நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புரட்டாசி மாதம் கடந்த செப்டம்பர் 18ம் தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் பெரும்பாலும் பலர் அசைவ உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தி விடுவர். அறிவியல் ரீதியாக பார்க்கையில் வெயில் குறைந்து மழை துவங்கும் காலமான புரட்டாசியில் அசைவ உணவுகளை உண்டு சாப்பிட்டால் உடலுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது தான் உண்மை.

ஆனால் சிலர் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்று விரதம் இருந்து வழிபாடு நடத்துவார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் சமைத்த உணவுகளை மட்டுமே உண்பார்கள். வெளியிலோ மற்ற இடங்களிலோ உணவுகள் வாங்கி சாப்பிடமாட்டார்கள்.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் இறைச்சி மற்றும் மீன்களின் விலை குறையத் தொடங்கும். இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியது(செப்டம்பர்18) முதல் இன்று(செப்டம்பர்28) வரையிலான 10 நாட்களில் அசைவ ஹோட்டல்களில் விற்பனையானது 40 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

அசைவ ஹோட்டல் உரிமையாளர்கள் 40 சதவீதம் விற்பனை குறைந்ததை எண்ணி சோகத்தில் இருக்கும் நிலையில் சைவ ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஒரே குஷிதான். ஏன் என்றால் இந்த பத்து நாட்களில் அசைவ ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைந்தது போலவே சைவ ஹோட்டல்களில் இந்த 10 நாட்களில் விற்பனையானது 10 சதவீதம் அதிகரித்து இருக்கின்றது.

இது குறித்து தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வெங்கட சுப்பு அவர்கள் “புரட்டாசி மாதம் பிறந்து 10 நாட்களே ஆகியுள்ளது. அதற்குள் அசைவ ஹோட்டல்களில் உணவு விற்பனையானது 40 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு மக்களிடையே இருக்கும் தேவையில்லாத பீதியே காரணமாகும். மேலும் சைவ ஹோட்டல்களில் 10 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது” என்று அவர் பேசினார்.

அசைவ ஹோட்டல்களில் தொடர்ந்து விற்பனை குறைந்து வருகிறது. இதையடுத்து அசைவ ஹோட்டல்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

Previous articleஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!!
Next articleஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருது!!! தமிழகத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்!!!