Rice Adai: கேரளா ஸ்பெஷல் “அரிசி அடை” – செய்வது எப்படி?

0
40
How to make Kerala Special Rice Adai in Tamil
How to make Kerala Special Rice Adai in Tamil

Rice Adai: கேரளா ஸ்பெஷல் “அரிசி அடை” – செய்வது எப்படி?

அரசி அடை என்பது அனைவரும் அறிந்த ஒரு பாரம்பரிய உணவு வகை ஆகும். இதில் இனிப்பு மற்றும் காரம் என இரு வகைகளில் அடை இருக்கிறது. புழுங்கல் அரசி, பச்சரிசி, இட்லி அரிசி உள்ளிட்டவைகளை ஊற வைத்து அரைத்து இந்த வகை உணவு சமைக்கப்படுகிறது. இந்த அரசி அடை கேரளா மக்களளுக்கு பிடித்த உணவு ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*இட்லி அரிசி – ஒரு கப்

*தேங்காய் துருவல் – அரை கப்

*எண்ணெய் – அடை செய்ய தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கப் அளவு இட்லி அரிசியை போட்டு கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அரசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரசி நன்கு ஊறி வந்ததும் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.

How to make Kerala Special Rice Adai in Tamil
How to make Kerala Special Rice Adai in Tamil

அடுத்து ஒரு மூடி தேங்காய் எடுத்து அதை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். இந்த தேங்காய் துருவலை அரைத்து வைத்துள்ள அரிசி மாவில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். இதை 15 முதல் 20 நிமிடம் வரை ஊற விடவும்.

அடுத்து அடுப்பில் தோசைக்கல் வைத்து அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள அடை மாவை ஊற்றி தோசை வாரத்துக் கொள்ளவும். அடுத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடையை வேக விட்டு எடுக்கவும்.