லிஸ்ட்ரஸ் திடீர் ராஜினாமா! என்ன நடக்கிறது இங்கிலாந்து நாட்டில்? அடுத்த பிரதமர் யார்?

0
97

இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடுமையான போட்டிகளுக்கு இடையில் அந்த நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ்டிரஸ் நேற்று திடீரென்று பதவி விலகினார்.

இந்த நிலையில் தற்போது புதிய பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மட்டுமல்லாமல் பென்னி மோர்டான்ட், பென்னி வாலஸ் ஜெர்மி ஹன்டின் மற்றும் புவனேஷ் ஜான்சன் உள்ளிட்ட வரும் புதிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல அந்த நாட்டின் வளர்ச்சிக்கு துடிப்பான பொருளாதாரம் மிகவும் முக்கியம் ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டில் ஒரு வாரம் மிகப்பெரிய மந்தநிலை உலக நாடுகளிடையே கடுமையான பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

உலகின் சக்தி வாய்ந்த நாடாக கருதப்பட்ட அமெரிக்காவும் கூட இந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை. அப்போது ஆரம்பமான மந்த நிலை தற்போது வரையில் நீண்டு கொண்டே வருவதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் நோய் தொற்றால் உண்டான தாக்கம் பொருளாதாரத்தை மேலும் பலமாக தாக்கியது.

இப்படியான சூழ்நிலையில் தற்சமயம் ஒவ்வொரு நாடாக சிக்கி வருகிறது இதில் சிக்கிய இங்கிலாந்து மீள முடியாமல் தவித்து வருகிறது அந்த நாட்டில் எரிபொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. வாழ்வதற்காக மக்கள் செலவு செய்யும் தொகையும் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதே அளவு வருமானம், ஊதியம் அதிகரிக்கவில்லை.

ஆகவே மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனால் சமீபத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியிலிருந்து விலகினார். அதன் பிறகு அடுத்த பிரதமருக்கு கடுமையான போட்டி நிலவியது. இதில் லிஸ்டிரஸ் புதிய பிரதமராக தேர்வானார்.

ஆனாலும் அவர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பணக்காரர்களுக்கு மேலும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டனர். ஆகவே எந்த மாற்றமும் உண்டாகவில்லை. மாறாக போராட்டக்காரர்கள் தீவிரமடைந்தனர். இதனை தொடர்ந்து தன்னுடைய நிதி அமைச்சரை மாற்றி அமைத்தார் ஆனால் அதிலும் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையும் திரும்பப் பெறப்பட்டது கடைசியாக வேறு வழி இன்றி 45 நாட்களுக்கு பிறகு நேற்று தான் ராஜினாமா செய்வதாக புதிய பிரதமர் பதவிக்காக கலர் போட்டியிட்டு வருகிறார்கள் ஏற்கனவே இதற்கான போட்டியில் பங்கேற்று இருந்த இந்திய வம்சாவளியை சார்ந்த ரிஷி சுனக் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

இந்த போட்டியில் ரிஷி சுனக்குக்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும் சக போட்டியாளர்களாக பென்னி மோர்டான்ட், பென்னி வாலஸ்,ஜெர்மி ஹண்ட்டின் மற்றும் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் நிதியமைச்சர் ஆக இருந்த ரிஷி சுனக் நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றவராக இருப்பார் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது எதிர்பார்ப்பின் படி ரிஷி வெற்றி பெற்றால் இங்கிலாந்து நாட்டின் அதிபராகும் இந்திய வம்சாவளியை சார்ந்த முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெறுவார் இவருக்கு அடுத்தபடியாக பென்னி மோர்டண்ட் இருக்கிறார்.

எப்படி பார்த்தாலும், புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர் நீண்ட காலமாக இருந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு சரியான தீர்வை காண்பவராக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.