இப்படி பண்ணிட்டீங்களே பன்னீரு! ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டால் அப்செட் ஆன சசிகலா!

0
98

ஒரு விசாரணை அறிக்கை மூன்று வருட நீண்ட விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை அதிமுகவின் ஒட்டுமொத்த அணிகளையும் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. சசிகலா அணி தினகரன் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி பன்னீர்செல்வம் அணி என்று ஒவ்வொரு அணியும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை காரணமாக வைத்து நடுநடுங்கி போய் இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாக இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதில் சசிகலா கே எஸ் சிவக்குமார் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை விசாரணை எல்லாவற்றிற்கும் ஆரம்ப புள்ளி என்னவோ பன்னீர்செல்வம் தான் அவர்தான் இந்த விசாரணையை ஆரம்பித்து வைத்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்து தான் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று அவர்தான் கோரிக்கை வைத்து தர்மயுத்தத்தை ஆரம்பித்தார் இந்த தர்மயுத்தம் தான் சசிகலாவிற்கு எதிராக தற்போது திரும்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பன்னீர்செல்வம் திரும்பி இருக்கிறார் ஆகவே பன்னீர்செல்வம் சசிகலா உள்ளிட்ட இருவரும் நெருக்கம் காட்டி வருகிறார்கள். இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருவதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அதிமுகவில் பிரிந்தவர்கள் மறுபடியும் இணைய வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் சசிகலாவும் நாங்கள் அனைவரும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம் என்று வெளிப்படையாக போட்டு உடைத்து விட்டார்.

இப்படி ஒரு நிலையில் தான் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்த ஒரு விசாரணை தற்போது சசிகலாவிற்கு எதிராக திரும்பி இருக்கிறது இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சமீபத்தில் பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டிகளில் கூட எனக்கு சசிகலா மீது ஜெயலலிதா மரணத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

சசிகலா தன்மீது இருக்கும் களங்கத்தை துடைக்க எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று தெரிவித்தேன். மற்றபடி எனக்கு இந்த மரணத்தில் எந்த விதமான சந்தேகமுமில்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆனால் தற்பொழுது அவர் ஆரம்பித்து வைத்த அதே விசாரணையே சசிகலாவிற்கு எதிராக திரும்பி இருக்கிறது இந்த அருகில் சசிகலா மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டிருக்கின்றன முக்கியமாக சசிகலா ஜெயலலிதா இடையிலான உறவு தொடர்பாகவும் இதில் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் முன் வைத்துள்ளது.

ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூகமான உறவு இல்லை. பிரிவுக்கு பிறகு இவர்கள் இணைந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கவில்லை, ஜெயலலிதா இறந்த சமயத்திலும் முரண்பாடு என்று ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.

சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்ற நிலையில், அவர் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பன்னீர்செல்வம் இப்போது நம்மிடம் நட்போடு இருக்கிறார். ஆனால் அன்று அவசரப்பட்டு அவர் செய்து செயலால் இன்று நாம் மாட்டிக் கொண்டோம்.

தேவையில்லாமல் அரசியல் ஆதாயத்திற்காக அவர் செய்த தர்மயுத்தம் காரணமாக, தற்போது தேவையில்லாத பழி, புகார்களுக்கு நாம் ஆளாகி விட்டோம். இப்படி செய்து விட்டாரே என்று பன்னீர்செல்வம் மீது சசிகலா தரப்பு வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பன்னீர்செல்வம் தொடர்பாக பேச்சு எடுத்தாலே இரண்டு தினங்களாக முகம் சுளிக்கும் அளவிற்கு சசிகலா அப்செட்டில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பன்னீர்செல்வம் தான் எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்தார் என்ற அப்செட்டில் சசிகலா தரப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். இன்னொரு புறம் பன்னீர்செல்வம் தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முதலில் அரசியல் ஆதாயத்திற்காக சந்தேகம் எழுப்பியது என்னவோ திமுக தான்.

அதை அண்ணன் பன்னீர்செல்வம் கையில் எடுத்தார். அதனை தொடர்ந்து பன்னீர்செல்வம், பழனிச்சாமி உள்ளிட்டோர் ஒப்பந்தம் போட்டு ஒன்றிணைந்தனர். இந்த ஒப்பந்த மூலமாகவே ஆணையம் வந்தது. மற்றபடி இந்த ஆணையம் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.