இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம் !!

Photo of author

By Amutha

இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம் !!

Amutha

River water turned blood red!! Distraught public fear !!

இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம்!! 

நன்றாக இருந்த ஆற்று நீர் திடீரென நதிநீர் முழுவதும் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பீர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவால் இந்த நிற மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் நாகோ என்ற நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அந்த நதிநீர் முழுவதும் திடீரென அடர்  கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்களும், பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை ஆராய்கையில் அந்த நதியின் அருகே மதுபான ஆலை ஒன்று உள்ளதால் அந்த ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில்  இருந்து உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர் காலை 9:30 மணி அளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் அதன்பின்னர் நதியில் நிறம் சேருவது தவிர்க்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பீர் தயாரிப்பு ஆலையான  ஓரியன் ப்ரூவரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கலந்ததால் நிறம் மாறியது. இதனால் சுகாதார அபயங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளது. மேலும் இது பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கோரி இருக்கிறது.

மேலும் தொழிற்சாலையில் குளிர்விக்க பயன்படுத்தப்படும் குளிரூட்டும் நீரில் உணவு சுகாதார சட்டத்தின் அமலாக்க விதிமுறைகளில் பட்டியலிடப்பட்டுள்ள ப்ரோபிலீன் கிளைக்கோல் எனப்படும் உணவு செயற்கைக்கான பொருள் உள்ளது. அது குளீர்நீரில் கசிந்ததும் மழைநீர் வடிகாலின் வழியாக நதியில் கலந்து அது சிவப்பு நிறமாக மாறிவிட்டது என்று கூறியுள்ளது.

இதையடுத்து கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஹஜ்ஜின் முரானோ தெரிவித்தார். மேலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய  நடவடிக்கை எடுக்கப்படும். அழகு சாதனங்கள் கொண்ட தொழில்களில் இந்த பொருள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இது மிகவும் பாதுகாப்பானது என அமெரிக்க நச்சுப் பொருட்கள் மற்றும் நோய் பதிவேடு முகமை தெரிவித்துள்ளது. ஆனால் தொழிற்சாலைகளில் இந்த ரசாயனம் குளீரூட்டும் செயல்பாட்டில் உணவில் பயன்படுத்தப்படுகிறது.