சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்!! அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சாலைகள், பாலங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 ஆவது தளத்தில் இன்று காலை நடந்து முடிந்தது.
இந்த கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சாலை பணிகள் மற்றும் மேம்பால பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சாலை பணிகள் முடிவடைந்து விட்டதா இன்னும் பணிகள் மீதமுள்ளதா என்பதை பற்றி இந்த கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை செய்து வருகிறது.
செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் பார்வையிட்டு வருகிறோம். இந்த சாலை, மேம்பால பணிகளால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே உடனடியாக தாமதம் செய்யாமல் உரிய காலத்தில் இந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும். மீதமுள்ள சாலை, மேம்பால பணிகளை பருவ மழை வருவதற்குள் முடிக்க வேண்டும்.
சென்னையில் உள்ள சாலைகள் அனைத்தும் இயற்கை பேரிடரை தாங்கும் அளவிற்கு சரி செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் துறைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை மற்றும் தொடர்ச்சியான ஆய்வுகள் தான் என்று முதல்வர் கூறி உள்ளார்.
போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சாலை மேம்பால பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை முடிக்க நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.