தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! ரத்தம் வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்!
தூத்துக்குடி மாவட்டம் மீனவர் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பதுவை நகையைச் சேர்ந்தவர் ரூபிஸ்டன். மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி ஸ்மைலா (36). இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் ஸ்மைலா கல்லாமலியில் உள்ள அவரது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். மேலும் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் ரூபிஸ்டன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். போது காலை ஐந்தரை மணி அளவில் திடீரென்று மர்மநபர்கள் அவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
மேலும் வீட்டின் படுகையறையில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்மைலாவின் முகத்திலும், கால்களிலும் கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் அவரிடம் தாலிச் சங்கிலி பறித்துக் கொண்டதுடன் பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி ,வளையல் போன்ற 15 அரை பவுன் நகைகள் மற்றும் மூன்றாயிரம் பணத்தையும் கொள்ளையடித்த அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
மேலும் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்மைலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். மேலும் ஸ்மைலாவை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து குலசேகரன் பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த தகவலின் பேரில் குணசேகரப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நம்பரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையடித்துச் சென்ற நகைகள் பணத்தின் மொத்த மதிப்பு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக கருதப்படுகிறது. மீனவர் வீடு புகுந்து மனைவியை கத்தியால் குத்தி பணம் நகைவர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.