“கல் உப்பு” ஒன்று போதும்.. “மஞ்சள் பற்கள்” வெண்மையாக மாற!! ஒரே நாளில் தீர்வு காண முடியும்!!

0
110
#image_title

“கல் உப்பு” ஒன்று போதும்.. “மஞ்சள் பற்கள்” வெண்மையாக மாற!! ஒரே நாளில் தீர்வு காண முடியும்!!

நவீன கால வாழ்க்கையில் உணவு முறை மாற்றம்,புகை பிடித்தல்,மது அருந்துதல்,டீ,காபி அதிகம் பருகுதல் ஆகியவை வெண்மையான பற்கள் மஞ்சள் நிறத்தில் மாற முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.நம் முன்னோர்கள் அனைவரும் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு இது போன்ற மஞ்சள் பற்கள்,ஈறுகளில் ரத்தம் கசிதல்,பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வில்லை.தற்பொழுது இந்த முறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை.

மேலும் மஞ்சள் பற்களை சரி செய்ய தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய் கொண்டு வாயை நன்கு சுத்தம் செய்யலாம்.வாழைப்பழத்தோல் கொண்டு பற்களை நன்கு தேய்த்து சுத்தம் செய்யலாம்.அது மட்டுமில்லாமல் வெந்தயம் பயன்படுத்தி அசிங்கமான மஞ்சள் பற்களை வெள்ளையாக மாற்றலாம்.இப்படி பல்வேறு வழிகள் இருக்கிறது.இதில் ஒன்று தான் கல் உப்புடன் 5 பொருட்களை பொடி செய்து பல் துலக்கினால் பல் மஞ்சள் கறைகள் உடனடியாக நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்:-

*கல் உப்பு – 1 தேக்கரண்டி

*கிராம்பு தூள் – 1 தேக்கரண்டி

*பட்டை தூள்- 1 தேக்கரண்டி

*அதிமதுரம் – 1 தேக்கரண்டி

*உலர்ந்த வேப்ப இலை – 1/4 கைப்பிடி அளவு

*உலர்ந்த புதினா இலை – 1/4 கைப்பிடி அளவு

செய்முறை:-

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 2 தேக்கரண்டி இலவங்கம்(கிராம்பு) சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து 2 அல்லது 3 துண்டு பட்டை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து எதையும் கிராம்பு பொடி வைத்துள்ள பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே மிக்ஸி ஜாரில் 1/4 கைப்பிடி அளவு உலர்ந்த வேப்ப இலை மற்றும் 1/4 கைப்பிடி அளவு உலர்ந்த புதினா இலை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.இதையும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பட்டை + கிராம்பு தூளில் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய அதிமதுரப் பொடி 1 தேக்கரண்டி சேர்க்கவும்.

அடுத்து 1 தேக்கரண்டி கல் உப்பு எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.அரைத்த பொடிகளுடம் இந்த உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு சிறிய பவுல் எடுத்து அதில் தாயார் செய்து வைத்துள்ள பொடியில் 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.அடுத்து பல் துலக்கும் பிரஷ் எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள கலவையை சேர்த்து பற்களை நன்கு துலக்கவும்.2 அல்லது 3 நிமிடம் இவ்வாறு செய்யவும்.பின்னர் தண்ணீர் கொண்டு வாயை சுத்தம் செய்யவும்.

நாம் சேர்த்துள்ள இந்த கல் உப்பு உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கும். அதிமதுரம் மற்றும் வேப்ப இலை ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பட்டை மற்றும் கிராம்பு உணர்ச்சியற்ற முகவர்களாக செயல்படுகின்றன.புதினா இலை வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Previous articleமகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்!!! 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிப்பு!!!
Next article“தேங்காய் தோசை” கேள்விப்பட்டிருக்கீங்களா? இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட்ல அசந்துடுவீங்க!!